செய்யாத தப்பிற்காக நடுவர் செய்த செயலால் கதறி அழும் ரொனால்டோ!. அதிர்ச்சி வீடியோ!

செய்யாத தப்பிற்காக நடுவர் செய்த செயலால் கதறி அழும் ரொனால்டோ!. அதிர்ச்சி வீடியோ!


football player ronaldo crying for red card

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணியான ரியல் மாட்ரிடில் இருந்து ஜுவாண்டஸ் அணிக்கு மாறினார்.

இந்நிலையில், ஜுவாண்டஸ் மற்றும் வலென்சியா அணிகளுக்கிடையே போட்டி  நடைபெற்றது. அங்கு நடந்த போட்டியில் ஜுவாண்டஸ் அணிக்காக ரொனால்டோ விளையாடும் முதல் போட்டி என்பதால், ரொனால்டோவின் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். 

பரபரப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரொனால்டோவின் கை விறல் வலென்சியா அணி வீரர் முரில்லோவின் தலையில் எதார்த்தமாக பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அங்கு நடந்தவற்றை சரியாக கவனிக்காத நடுவர், வலென்சியா அணி வீரர்களிடம் பேசிவிட்டு, ரொனால்டோவிற்கு போட்டியை விட்டு உடனடியாக வெளியேறும்படி சிவப்பு அட்டையை காட்டியுள்ளார். 

இது ரொனால்டோ உட்பட மைதானத்தில் குழுமியிருந்த அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ரொனால்டோ மைதானத்தில் அமர்ந்து கதறி அழுதார்.