விளையாட்டு வீடியோ

பயிற்சியில் ஈடுபட்டிருந்த கால்பந்தாட்ட வீரரை, திடீரென தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் உறையவைக்கும் வீடியோ!

Summary:

Football player attacked by lightening in moscow

ரஷ்யா மாஸ்கோவின் அருகே orekhovo- zuevo என்ற நகரில் அமைந்துள்ள மைதானத்தில் கால்பந்தாட்ட அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளது.  அப்பொழுது 16 வயது நிறைந்த இவான் சோபர்ஸ்கை என்ற இளம் கோல்கீப்பரும் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென வந்த மின்னல் அவரை தாக்கியது. இதில்  நிலைகுலைந்து போன அவர் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் விரைந்து சென்று இவான் சோபர்ஸ்கைக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவசரஅவசரமாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் இவான்  அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தற்போது அவர் கோமா நிலையில் இருப்பதாகவும்,  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் அவர் பயிற்சியில் ஈடுபட்ட அன்று வானத்தில் எந்த ஒரு அறிகுறியும் இல்லை தெளிவாக இருந்தது எனவும்,  மின்னல் எப்படி வந்தது என தெரியவில்லை என்று பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவான் கழுத்தில் உலோகத்திலான செயின் ஒன்று போட்டிருந்தார். அதனால் அவரை மின்னல் தாக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவான் சோபர்ஸ்கையை மின்னல் தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement