விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இதுவே முதல் முறை.! மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் பெண் நடுவர்.!

Summary:

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்டில் பெண் நடுவர் களமிறங்கவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிலாரே போலாசாக் என்ற பெண் நடுவர் அம்பயராக களமிறங்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆண்கள் ஒருநாள் போட்டியில் களநடுவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. விதிகளின் படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவரை நடுவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அனுமதி உள்ளதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிலாரே போலோசாக்கை பரிந்துரை செய்துள்ளது.


Advertisement