விளையாட்டு WC2019

உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து!

Summary:

first time england won the worldcup

இன்று இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 1975 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இங்கிலாந்து அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. அதன்பிறகு அதிக பௌண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Advertisement