விளையாட்டு WC2019

முக்கிய வீரருக்கு காயம்! மிகப்பெரிய பின்னடைவுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நியூசிலாந்து!

Summary:

Ferguson not playing due to injury

அரையிறுதிக்குள் நுழையும் மூன்றாவது அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் மூன்றாவது அணியாக முன்னேறும். இரு அணிகளுக்கும் இது தான் கடைசி லீக் போட்டி. எனவே தோல்வியுறும் அணி அடுத்து நடைபெறும் பாக்கிஸ்தான்-பங்களாதேஷ் ஆட்டத்திற்காக காத்திருக்க வேண்டும். அந்த போட்டியில் பாக்கிஸ்தான் வென்றால் ரன்ரேட் அடிப்படையில் 4 ஆவது அணி அரையிறுதிக்குள் நுழையும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவுடன் ஆடிய அதே அணியுடன் களமிறங்குகிறது.

ஆனால் நியூசிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த உலகக்கோப்பையில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருக்கும் முக்கிய பந்துவீச்சாளரான பெர்குயூசன் தோள்பட்டை காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சௌதி மற்றும் சோதிக்கு பதிலாக மாட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளனர்.


Advertisement