விளையாட்டு

பிசிசிஐ வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தால் ரவி சாஸ்திரியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Summary:

Fans got angry on bcci for comparing ravi shasthri and rahul dravid

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தடுப்பு சுவர் ராகுல் டிராவிட் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் "இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு ஜாம்பாவான்கள் சந்தித்தபோது" என குறிப்பிட்டுள்ளது. 

பிசிசிஐயின் இந்த பதிவிற்க்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் இருப்பது ஒரே ஒரு ஜாம்பாவான் தான், அது டிராவிட் மட்டுமே. தேவையில்லாமல் ரவி சாஸ்திரியை டிராவிட்டுடன் ஒப்பிட்டு அவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement