தேசிய கொடியுடன் தென்னாபிரிக்க வீரரின் காலில் விழுந்த இந்திய ரசிகர்! வைரலாகும் வீடியோ.Fan invades Security To Meet Quinton De kock In ind vs Sa

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. ராஞ்சியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் புகுந்து தென்னாபிரிக்க அணியின் வீரர் டீகாகின் காலில் விழுந்தார்.

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்தில் நடந்த போட்டியின் போதுதான் இந்த சமப்வம் நடந்துள்ளது. பாதுகாப்பு வீரர்களின் தடுப்பையும் தாண்டி இந்திய ரசிகர் ஒருவர் தென்னாபிரிக்க வீரரின் காலில் விழுந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ind vs sa

எனினும் உடனே அங்கு விரைந்துவந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புற படுத்தினர். இந்நிலையில் அந்த ரசிகர் ஏற்படுத்திய கலவரத்தில் அவரது செருப்பு மைதானத்திற்குலையே விழுந்துவிட்டது. இதனை கவனித்த டீக்காக அந்த செருப்பை தனது கையால் எடுத்து அந்த ரசிகரிடமே தூக்கி எறிந்தார். டீகாகின் இந்த செயலை பலரும் பாராட்டிவருகின்றனர்.

என்னதான் ஒரு வீரரை தனக்கு பிடித்திருந்தாலும் தேசிய கொட்டியுடனா அவரது காலில் விழுவது என நெட்டிசன்கள் அந்த ரசிகரை திட்டி வருகின்றனர்.