நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை ஓடவிட்ட அயர்லாந்து அணி! 85 ரன்களில் ஆள் அவுட்!England lost all wickets in 85 runs against to Ireland

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை இறுதி போட்டியில் அதிக பவுண்டரி முறையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்த ஓரிரு வாரத்திலையே அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியுடன் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Eng vs Ire

இந்நிலையில் அயர்லாந்து அணி வீரர்கள் மிக சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணி வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க செய்தனர். இறுதியில் 23.4 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியுடன் 85 ரன்களில் ஆட்டம் இழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.