விளையாட்டு

இங்கிலாந்து 583.. ஆண்டர்சன் வேகத்தில் சரிந்த பாக்கிஸ்தான் பேட்ஸ்மேன்கள்!

Summary:

England 583 for 8 and pakistan 24 for 3

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்கியது. முதல் நாளில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாளான நேற்று பேட்டிங்கை தொடர்ந்த க்ராலி மற்றும் பட்லர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். க்ரால் இரட்டை சதமும் பட்லர் சதமும் விளாசினர். க்ராலி 267, பட்லர் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய பாக்கிஸ்தான் அணிக்கு ஆண்டர்சன் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார்.

பாக்கிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மசூத்(4), அபித் அலி(1), பாபர் அசாம்(11) என அடுத்தடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாக்கிஸ்தான் அணி 10.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது.


Advertisement