விளையாட்டு WC2019

ஆஸ்திரேலிய அணி வீரரின் முகம் கிழிந்து இரத்தம் கொட்டியது! இங்கிலாந்து மரண பந்துவீச்சு!

Summary:

Eng vs Aus archer ball hits carey face video goes viral

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தொடக்கத்திலையே ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 23 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இந்நிலையில் 7 வது ஓவரின் கடைசி பந்தை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீச அதை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் கேரி எதிர்கொண்டார். ஆர்ச்சர் வீசிய பந்து பயங்கர வேகத்தில் பவுன்சராக மாறி கேரியின் முகத்தை தாக்கியது. இதில் கேரியின் ஹெல்மெட் கீழே விழுந்ததோடு, கேரியின் முகத்தில் பந்து பலமாக பட்டு அவரது முத்தத்தில் இருந்து இரத்தம் கொட்டியது.

அதன்பின்னர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுத்து தற்போது விளையாடிவருகிறார் கேரி.
 


Advertisement