சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விராட் கோலி கிடைத்துவிட்டார்.! ஓப்பனாக பேசிய டு பிளெஸ்சிஸ்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விராட் கோலி கிடைத்துவிட்டார்.! ஓப்பனாக பேசிய டு பிளெஸ்சிஸ்.!


du plessis talk about young player

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 55வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6   விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 rudhraj keikvat
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் விளையாடி 62 ரன்கள் எடுத்தது வெற்றி பெற பெரிதும் உதவியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பிப்டி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டு பிளெஸ்சிஸ் பேசுகையில், இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.  ஆனால் நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம்.  எங்களுடைய அணியில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார் என தெரிவித்தார்.