"நானும் பீல்டிங் பண்ணுவேன்" - போட்டியின் நடுவே சேப்பாக்கம் மைதானத்தில் அங்குமிங்கும் ஓடி  அடம்பிடித்த நாய்.! வீடியோ உள்ளே..!!

"நானும் பீல்டிங் பண்ணுவேன்" - போட்டியின் நடுவே சேப்பாக்கம் மைதானத்தில் அங்குமிங்கும் ஓடி  அடம்பிடித்த நாய்.! வீடியோ உள்ளே..!!


Dog entered ins va aus match Chennai cheppakam stadium

IND Vs AUS போட்டிக்கு நடுவே நாய் செய்த அதகளம் தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் - இந்திய கிரிக்கெட் அணியும் மோதிய டி20 போட்டித்தொடரில் இந்தியா அபார வெற்றி அடைந்தது. 

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகள் வீதம் பெற்றுள்ளன. இதனை இன்று நடைபெறும் மூன்றாவது இறுதி போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

cricket match

இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதற்பாதி விளையாட்டு முடிவடைந்துள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 269 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியின் நடுவே இந்திய அணி பீல்டரிங் செய்துகொண்டு இருந்தபோது நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்து ஓடியது. 

இதனால் விளையாட்டு சிறிது நேரம் தடைபட்ட நிலையில், நெட்டிசன்கள் பீல்டரிங் செய்ய மைதானத்திற்குள் வந்ததோ என கலாய்த்து வருகின்றனர்.