நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க வந்த பிரபல தமிழ் இயக்குனர்! யார் தெரியுமா?

நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க வந்த பிரபல தமிழ் இயக்குனர்! யார் தெரியுமா?


Director atlee went to ipl match at chennai

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 23 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

atlee

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 108 ரன் எடுத்தது. 109 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி சற்று சறுக்கலை சந்தித்தே இலக்கை எட்டியது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தை பார்க்க பிரபல இளம் இயக்குமார் அட்லீ தனது மனைவியுடன் சேப்பாக்கம் மைதானம் வந்திருந்தார்.

atlee

கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாரூக்கானுடன் அமர்ந்து ஆட்டத்தை பார்த்தார் அட்லீ. தற்போது தளபதி விஜய்யை வைத்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தில் ஷாருக்கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது இவர்களது இந்த சந்திப்பு அதை உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த சந்திப்பு தளபதி 63 படத்திற்கான சந்திப்பா அல்லது இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்க எடுக்கும் முயற்சியா என்பது தெரியவில்லை.