விளையாட்டு

179 போட்டிகளில் விளையாடியும் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்ட தினேஷ் கார்த்திக்!

Summary:

Dinesh karthik missed 100 in 3 runs

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 42 போட்டிகள் இதுவரை முடிவுபெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் விளையாடிவருகிறது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணி சார்பாக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 97 ரன் எடுத்து அணியின் எணிக்கையை உயர்த்தினார். இதுவரை 179 ஐபில் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் எடுத்த 97 ஓட்டம்தான் ஐபில் போட்டிகளில் அவர் எடுத்த அதிக பட்ச எண்ணிக்கை ஆகும்.

12 வருடங்களாக ஐபில் போட்டிகளில் விளையாடிவரும் தினேஷ் கார்த்திக், 179 போட்டிகளில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத நிலையில் இன்றைய ஆட்டத்தில் 3 ரன்களில் 100 அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார்.


Advertisement