விளையாட்டு

தோனி அன்றைக்கு சொன்ன அந்த ஒரு விஷயம்தான் இன்னைக்கும் எனக்கு பயன்படுது!! ஓப்பனா பேசிய நடராஜன்..

Summary:

தோனி கூறிய அறிவுரை தனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித

தோனி கூறிய அறிவுரை தனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியது மூலம் கிரிக்கெட் உலகில் பிரபலமானார் தமிழகத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபில் போட்டியில் கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகவே மாறிவிட்டார்.

இந்நிலையில், கடந்த ஐபில் சீசனில் சென்னை அணியுடனான ஆட்டத்திற்கு பிறகு தோனியுடன் பேசியது பற்றியும், அவர் தனக்கு கூறிய அறிவுரையும் தற்போது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ளார் நடராஜன்.

இதுபற்றி கூறிய அவர், "சென்னை அணியுடன் விளையாடியபோது, தோனிக்கு ஒரு பந்தை ஸ்லாட்டில் பிட்ச் செய்தேன். தோனி அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஆனால் அடுத்த பந்திலையே அவரை ஆட்டம் இழக்க செய்தேன். இருப்பினும் தோனி சிக்ஸர் அடித்த பந்து பற்றித்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அந்த போட்டி முடிந்ததும் தோனியுடன் பேசினேன். தோனியுடன் பேசுவதே பெரிய விஷயம்தான். அவர் எனது பந்துவீச்சை பாராட்டினார். மேலும், ஸ்லோ பவுன்சர் மற்றும் கட்டர்கள் என பல்வேறு வேரியேசனில் பந்துவீசுங்கள் என கூறினார். தோனி அன்று கூறியது தனக்கு இப்போது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக" நடராஜன் கூறியுள்ளார்.


Advertisement