ஹேர்ஸ்டைல் குறித்து ரகசியம் பகிர்ந்த தல தோனி; எல்லாம் அவுங்களுக்காகத்தானா?..!Dhoni share the secret of his hairstyle

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி. தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் இவர் அவ்வப்போது ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைல்களை மேற்கொள்வது இயல்பு. அந்த வகையில் சமீபத்தில் இவர் மேற்கொண்டுள்ள ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Cricketer Dhoni

இந்நிலையில் தோனி தனது ஹேர்ஸ்டைல் குறித்து பேசும்போது, "முன்பு நான் கிளம்ப 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் தற்போது கிளம்ப ஒரு மணிநேரத்திற்கும் மேலாகிறது.

ரசிகர்களுக்கு பிடித்துள்ளது என்பதால் ஹேர்ஸ்டைல் செய்தவாறு நான் வருகிறேன். என்றாவது ஒரு நாள் இந்த ஹேர்ஸ்டைல் போதும் வேற ஹேர்ஸ்டைல் மாற்றலாம் என்று நினைக்கும் போது அதனை நான் வெட்டி விடுவேன்" என்று தெரிவித்தார்.