நேற்றைய போட்டியில் தோனி செய்த சிறப்பான சம்பவம்!! மிரண்டு போன சச்சின்!!

நேற்றைய போட்டியில் தோனி செய்த சிறப்பான சம்பவம்!! மிரண்டு போன சச்சின்!!


Dhoni scored 50 after 2 years

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.

ஐபில் 15 வது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

csk

61 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணியின் ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனியும், தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவும் இணைந்து ரன் சேர்த்தனர். முதலில் நிதாமணமாக ஆடிய தோனி, இறுதியில் சற்று அதிரடி காட்டி ரன் சேர்த்தார்.

மொத்தம் 38 பந்துகள் சந்தித்த தோனி, 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், 4 விக்கெட்களை இழந்து 19 வது ஓவரில் வெற்றிபெற்றனர்.

csk

சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தோனி அரைசதம் அடித்ததை சென்னை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்திருந்த தோனி, அதன் பிறகு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த தொடரின் போது, ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும் தோனியின் பேட்டிங்கும் இந்த இரண்டு சீசனின் போது, கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது.

csk

தற்போது 2022 சீசனின் முதல் போட்டியிலையே தோனி அரைசதம் அடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தோனி அரைசதம் அடித்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி, ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். அதில், "தோனி சிறப்பாக ஆடினார். தன்னுடைய ஆட்டத்தை மெதுவாக தொடங்கினார். ஆனால், அவரின் அனுபவம், அமைதி, பொது அறிவு ஆகியவற்றை கலந்து பயன்படுத்தியதால் தான், சிஎஸ்கே தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளது." என பதிவிட்டுள்ளார்.