விளையாட்டு

நேற்றைய போட்டிக்கு பின் தோனி சொன்ன ஒத்த வார்த்தை! கிளப்பியது சர்ச்சை! கொதிக்கும் இணையதளம்.

Summary:

இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறிய வார்த்தை கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறிய வார்த்தை கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டியின் 37 வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி மிகவும் மந்தமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதனை அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி மிகவும் நிதானமாக ஆடி17.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை எனவும், இனிவரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினார்.

இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறிய கருத்து தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஜெகதீசன் போன்ற வீரர்கள் நன்றாக விளையாடியும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், தொடர்ந்து சொதப்பிவரும் ஜாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு தோனி வாய்ப்பு வழங்கிவருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Advertisement