திடீர் திருப்பம்! கிரிக்கெட் வேண்டாம், துணை ராணுவத்திற்கு செல்கிறேன்! தோணி கடிதம்!Dhoni joining Territorial Army for next 2 months

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி கடந்த வாரம் முடிவடைந்தது. நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அதிக ஓவர்கள் முறைப்படி வெற்றிபெற்றது. தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டி முடிந்ததை அடுத்து தல தோணி எப்போது ஓய்வு பெறுவார் என பல்வேறு விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

dhoni

இந்த சுற்றுப்பயணத்திற்கான அணி வீரர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் அடுத்த இரண்டு மாதத்திற்கு தன்னால் இந்திய அணியில் இடம் பெற முடியாது எனவும், தான் துணை ராணுவ பணிக்கு செல்ல இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தல தோணி கடிதம் அனுப்பியுள்ளார்.

தல தோணி இந்திய துணை ராணுவத்தில் சிறப்பு பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.