விளையாட்டு

நேற்றைய போட்டியில் சிறப்பான சாதனை செய்த தோனி! என்ன சாதனை தெரியுமா?

Summary:

Dhoni is the first captain who won first 100 ipl matches

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 25 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று சென்னை, ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி.

152 என்ற எளிதான இலக்கை தொடமுடியாமல் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் டோனி, ராய்டு இருவரும் ஓன்று சேர்ந்து சென்னை அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று சாட்னெர் உதவியுடன் கடைசி பந்தில் வெற்றிபெற்றது சென்னை அணி.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் 100 IPL போட்டிகளில் வெற்றிபெற்ற கேப்டன் என்ற பெருமையை சென்னை அணியின் கேப்டன் தோணி பெற்றுள்ளார். சென்னை அணிக்காக 152 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள டோனி 95 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

புனே அணிக்கு சிலகாலம் கேப்டனாக இருந்தபோது 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் டோனி. இதன்மூலம் முதல் 100 IPL போட்டிகளில் வெற்றிபெற்ற கேப்டன் என்ற சாதனையை செய்துள்ளார் தோணி.


Advertisement