ராணுவ உடையில் காரில் இருந்து கம்பீரமாக இறங்கிய தோணி! வைரல் வீடியோ இதோ!Dhoni in army dress video goes viral

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டத்தில் அதிக பவுண்டரி முறையில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான முதல் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தல தோணி தனது ஓய்வை அறிவிப்பார் என பல்வேறு விவாதங்கள் சென்றன.

dhoni

இந்நிலையில் இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும் தோணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தவிர்த்து ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் ராணுவ பயிற்சிக்கு சென்றுள்ள தோணி ராணுவ உடை அணிந்து காரில் இருந்து கம்பீரமாக இரங்கி சல்யுட் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.