தோனியின் காயம் எப்படி உள்ளது..?!! பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?!!

தோனியின் காயம் எப்படி உள்ளது..?!! பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?!!



Dhoni has a knee injury. Despite this, he continues to play

கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 19 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி 2 தோல்விகளை பெற்றுள்ளது.

கடந்த 12 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றிக்காக போராடிய எம்.எஸ்.தோனி முழங்காலில் காயமடைந்தார்.

இந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள 24 வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி பங்கேற்பது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. இது குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், தோனிக்கு முழங்காலில் காயம் இருப்பது உண்மை தான். இருந்த போதிலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

மேலும், பென் ஸ்டோக்ஸ் , தீபக் சாஹர், கேப்டன் தோனி, சிசண்டா மகலா , சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர். இது அணிக்கு கவலைதரும் விஷயமாகும். பென் ஸ்டோக்ஸ் வேகமாக குணமடைந்து வருகிறார், ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கு முன்பாக உடல்தகுதி பெறுவார் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.