
Dhoni avoided by indian players video goes viral
உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் விளையாண்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் அதே நிலையில் இருந்து ஆட்டம் தொடங்குகிறது. இதில், நேற்றைய ஆட்டத்தின் நடுவில் பாண்டியா பந்து வீச வந்தார். அப்போது, கேப்டன் விராட்கோலி, ரோஹித் சர்மா மற்றும் பாண்டியா மூவரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயம் அவர்களை கடந்து தல தோணி வருகையில் மூவரும் தல தோனியை கண்டுகொள்ளாமல் அவரை ஓரம்கட்டினர். தல தோணி அவர்களை கடந்து சென்று தனது கீப்பர் பணியை தொடர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இளைய சமுதாயத்துக்கு தல தோணி வழிவிட்டாலும், தல தோணி ஓரங்கட்டப்படும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மனதால் அழுகின்றன்னார்.
— King'XCI (@Kingtweetzs) July 10, 2019
Advertisement
Advertisement