தோனி ஓய்வு பெற்றால் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்! யாருக்கு; என்ன காரணம் தெரியுமா?

தோனி ஓய்வு பெற்றால் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்! யாருக்கு; என்ன காரணம் தெரியுமா?


dhoni-about-to-join-bjp-after-retirement

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் பிஜேபியில் இணைய உள்ளார்கள் என வதந்திகள் பரவின. கடைசியில் கௌதம் கம்பீர் மட்டும் பிஜேபியில் இணைந்து தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மகேந்திர சிங் தோனி பிஜேபி கட்சியில் இணையப் போகிறார் என அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சஞ்சய் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “உலக அளவில் பிரபலம் ஆன மகேந்திர சிங் தோனி என்க்கு மிகவும் நெருக்கமானவர். அவர் பிஜேபி கட்சியில் இணைவது குறித்து நீண்ட நாட்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரது ஓய்விற்குப் பின் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

MS Dhoni

சமீபத்தில் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த மகேந்திர சிங் தோனி இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெற மாட்டார் என்பது தெரிகிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் எப்போது ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்ற படபடப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

MS Dhoni

இந்நிலையில் தோனி வெகு சீக்கிரமாகவே தனது ஓய்வை அறிவித்து விட்டால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பிஜேபி சார்பில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனியின் மனதில் அவரது எதிர்காலத்தைக் குறித்து என்ன உள்ளது என்பதை அவர் இன்னும் வெளிப்படுத்தவில்லை.