தோனி மகள் மற்றும் ரிஷப் பந்த் செய்த அட்டகாசங்கள்- வைரலாகும் வீடியோ!

தோனி மகள் மற்றும் ரிஷப் பந்த் செய்த அட்டகாசங்கள்- வைரலாகும் வீடியோ!


dhoni -daughter

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மான்செஸ்டர், ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் மோதின. 

இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங்  செய்து 336 ரன்கள் எடுத்தது. 337 என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம்  40 ஓவராக  குறைக்கப்பட்டதுடன் இலக்கு 302 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

dhoni

இந்நிலையில் அந்த ஆட்டத்தில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த தல தோனி சிறப்பாக விளையாடாமல் ரசிகர்களின் கவனத்தை பெற தவறிய சமயத்திலும் அவரது மகள் ஜீவா தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் ஜீவா போட்டி நடைபெறும் மைதானத்தில் செய்த குறும்புத்தனமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.