பேட்டிங்கில் களமிறங்காமலே உலக சாதனை படைத்த தீபக் ஹூடா.! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்.!

பேட்டிங்கில் களமிறங்காமலே உலக சாதனை படைத்த தீபக் ஹூடா.! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்.!



dheepak hooda newe record

ஐபிஎல் தொடர், ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து திறமையை நிரூபித்து வந்த தீபக் ஹூடாவுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒருவழியாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.

அதன்பிறகு ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் இடம்பெற்று அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால், அடுத்து தென்னாப்பிரிக்க தொடர், அயர்லாந்து தொடர் என தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார். தீபக் ஹூடா இதுவரை 9 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளை இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். இதில் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை.

ஹூடா தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதில் நேற்று நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் தீபக் ஹூடாவிற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தீபக் ஹூடா இப்போட்டியின் மூலம் உலக சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் தீபக் ஹுடா விளையாடிய 14 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதனால் இன்றைய ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் வென்றால், தொடர்ந்து 15 போட்டிகளை வென்று சாதனை படைப்பார்.