விளையாட்டு

பிரேக்கிங்: உலகக்கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரருக்கு ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Dhawan will not play for next three weeks due to injury

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 15 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், ஆத்ரேலியா அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கடந்த போட்டியில் ஆத்ரேலியா அணியை இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தல் வெற்றிபெற்றது. மிக சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன் எடுத்தனர். இந்திய அணி வீரர் தவான் அதிகபட்சமாக 117 ரன்கள் அடித்தார்.

Image result for dhawan

இந்நிலையில் அடுத்துவரும் போட்டிகளிலும் தவான் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தவான் அடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு அடுத்த மூன்று வாரத்திற்கு ஓய்வு வழங்கப்படுவதாகவும் சற்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தவான் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி ரசிகர்களுக்கு இந்த செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவானுக்கு பதில் யார் களமிறக்கப்போவது என்ற தகவலும் வெளியாகவில்லை.


Advertisement