ரோஹித் ஷர்மாவை வைத்தே மும்பை அணியை வீழ்த்துவோம்.. முன்னணி வீரரின் பலே வியூகம்!dhawan tells rohit sharma is not in touch

ஐபிஎல் T20 தொடரின் 13 ஆவது சீஸனின் முதல் குவாலிபையர் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலம் வாய்ந்த மும்பை அணிதான் இந்த போட்டியில் வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை அணியை வீழ்த்துவதற்கான வியூகத்தில் ரோஹித் சர்மா தான் அந்த அணியில் தற்போது வீக்காக உள்ளார். அவரை வைத்துதான் காய் நகர்த்த வேண்டும் என அவரது நெருங்கிய நண்பரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Rohit sharma

அவர் கூறியிருப்பது ஒரு வகையில் உண்மை தான். இந்த ஐபிஎல் தொடரின் இடையில் காயம் காரணமாக ரோஹித் சர்மா சில போட்டிகளில் விளையாடவில்லை. கடை லீக் போட்டியில் களமிறங்கிய அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எனவே ரோஹித் சர்மா நீண்ட நாட்களாக டச்சில் இல்லை. எனவே அவரை வைத்தே மும்பை அணியை வீழ்த்துவோம் என தவான் கூறியுள்ளார். இந்திய அணியில் இருவரும் இணைத்து துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கினாலும் ஐபிஎல் தொடரில் வேறு என தவான் நிரூபித்துள்ளார்.