இந்தியா விளையாட்டு Ipl 2019

இங்கிராமின் சுயநலம்! சதத்தை இழந்த தவான்! சோகத்தில் ரசிகர்கள்!

Summary:

dhawan missed century for Ingiram

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 25 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்த தொடரின் 26வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் நேற்று மோதியது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி  கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

கொல்கத்தா அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டென்லி,  தான் சந்தித்த முதல் பந்திலே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். கொல்கத்தா அணியின் கில் அதிகபட்சமாக 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் தவான் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து டெல்லி அணி 180 ரன்கள்  எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இறுதிவரை அவுட் ஆகாமல் ஆடிய ஷிகர் தவான் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சதத்தினை தவற விட்டார். 18வது ஓவரின் 5 வது பந்தினை சந்தித்த இங்கிராம் சிங்கிள் தட்டிவிட்டு ஷிகர் தவானுக்கு சதத்திற்கு வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தினை முடித்து வைத்தார் இங்கிராம்.
 


Advertisement