முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா டெல்லி.. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸுடன் மோதல்!delhi vs mumbai first qualifier match

ஐபிஎல் T20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணியினை பொறுத்தவரையில் இந்த சீசன் தான் அவர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அந்த அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது. 

IPL2020

மும்பை அணியை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் வென்றால் 6 ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறும். மேலும் இந்த ஆட்டத்தில் தோல்விபெறும் அணிக்கு மேலும் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தொடரை பொறுத்தவரை இந்த 2 அணிகளுமே இறுதி போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இந்த சீசனில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் ஆடிய போட்டிகளில் இரண்டிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. இதற்கு நிச்சயம் பாலி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டெல்லி அணி களமிறங்குவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும்.