பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக உள்ளே சென்ற டெல்லி அணி.!

பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக உள்ளே சென்ற டெல்லி அணி.!


delhi capitals won RCB


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி  கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப்பெ மற்றும் படிக்கல் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். பிலிப்பெ 17 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய படிக்கல் 50 ரன்களுடனும், விராட் 29 ரன்களுடனும், ஏபிடி 35 ரன்களுடனும் வெளியேறினர். இறுதியில் 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 152 ரன்கள் எடுத்தது. 

Delhi capitals

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரரான பிரிதிவி ஷா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் மற்றும் ரஹானே இருவரும் அதிரடியாக ஆடி பிப்டி அடித்தனர். ஷிகர் தவான் 54 ரன்களும், ரஹானே 60 ரன்களும் எடுத்தநிலையில் அவுட் ஆகினர். சிறப்பாக ஆடிய டெல்லி அணி 19 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தின் வெற்றியால் பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக உள்ளே சென்றுள்ளது டெல்லி அணி.