இந்த அடி போதுமா.? தனி ஒருவனாக மாஸ் காட்டிய பிருத்வி ஷா.! மிரண்டுபோன கொல்கத்தா.!

இந்த அடி போதுமா.? தனி ஒருவனாக மாஸ் காட்டிய பிருத்வி ஷா.! மிரண்டுபோன கொல்கத்தா.!delhi-capitals-won-by-7-wkts

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 25-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதிஷ் ரானா 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய திரிபாதி 19 ரங்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் இயன் மோர்கன் மற்றும் சுனில் நரைன் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக  கில் 43 ரன்களும், ரசல் 45 ரன்களும் எடுத்திருந்தனர்.

kkr

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவருமே ஆரம்பத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இதனையடுத்து பிரித்வி ஷா மேலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் குவித்து பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.