நேற்றைய ஆட்டத்தின் வெற்றியால் மும்பை அணியை பின்னுக்கு தள்ளிய டெல்லி அணி.! புள்ளிபட்டியல் முழு விவரம்..!

நேற்றைய ஆட்டத்தின் வெற்றியால் மும்பை அணியை பின்னுக்கு தள்ளிய டெல்லி அணி.! புள்ளிபட்டியல் முழு விவரம்..!


delhi capitals team first place in ipl rank

ஐபில் 13 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது.  இதுவரை 19 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடந்த 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு சென்றது. இதுவரை நடந்த 19 போட்டிகளில் டெல்லி அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

delhi capitas

அதேபோல் 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் மும்பை அணியும் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் இரடாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதேபோல் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்று கொல்கத்தா அணி நான்காவுது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 

இதனையடுத்து விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வது இடத்தில் உள்ளது. அதேபோல் விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் , விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.