தீபக் சாகர், ராகுல் சாகர் இருவரும் சகோதரர்களா! உண்மை என்ன?

தீபக் சாகர், ராகுல் சாகர் இருவரும் சகோதரர்களா! உண்மை என்ன?



Deepak and rahul chahar are cousins

மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஆக்ராவை சேர்ந்த தீபக் சாகர் மற்றும் ராகுல் சாகர் இடம்பெற்றுள்ளனர். தீபக் வேகப்பந்து மற்றும் ராகுல் சுழற்பந்து வீச்சாளர்கள்.

ஐபிஎல் தொடரால் மிகவும் பிரபலமான இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டு புனே அணிக்கு இணைந்து ஆடினர். பின்னர் தீபக் சென்னை அணியிலும் ராகுல் மும்பை அணியிலும் இடம்பிடித்தனர். இருவரும் ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பையில் ஒன்றாக ஆடியுள்ளனர். 

Deepak chahar

இருவரும் சிறுவயது முதலே ஆக்ராவின் தெருக்களில் கல்லி கிரிக்கெட் ஆடியவர்கள். காரணம் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிக்கு பிறந்த சகோதரர்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களின் தாயார்களும் சகோதரிகள் தான். 

சிறுவயது முதல் தெருக்களில் ஒன்றாக ஆடிய இந்த சகோதரர்கள் முதல் முறையாக இந்திய அணியில் ஒரே நேரத்தில் இடம்பிடித்துள்ளனர். தீபக் சாகர் ஏற்கனவே ஒரு ஒருநாள் மற்றும் T20 போட்டியில் ஆடியுள்ளார். ராகுலுக்கு இதுதான் முதல் தொடர் என்பதாலும் தனது சகோதரனுடன் விளையாட உள்ளதாலும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.