விளையாட்டு

"எங்களுக்கு ஆதரவளிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொடுப்போம்" டி வில்லியர்ஸ் நம்பிக்கை!

Summary:

தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்றாலும் அடுத்த 3 போட்டிகளில் வென்று நிச்சயம் கோப்பையை வெல்வோம் டி வில்லியர்ஸ் நம்பிக்கை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சில ஐபிஎல் சீசனை காட்டிலும் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் அறிமுக வீர படிக்கல் நல்ல பார்மில் உள்ளார்.

இருப்பினும் இந்த சீஸனின் கடைசி நான்கு லீக் போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. ஆனால் முதல் பாதியில் சிறப்பாக ஆடியதால் ஒருவழியாக நான்காவது இடத்தை பிடித்து பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

IPL 2020: 3 Royal Challengers Bangalore (RCB) Players who can win the  Orange Cap in UAE | Most runs in IPL 2020 | CricXtasy

இந்த சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல அடுத்து வரும் 3 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும். இதற்கு முன்னதாக 4 போட்டிகளில் தொடர்ந்து தோற்றாலும் அடுத்த 3 போட்டிகளில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியுள்ள அவர், "ஐபிஎல் தொடரை பொறுத்தவரை எந்த அணியும் மற்ற அணியை எந்த தருணத்தில் தோற்கடிக்கும் என கணிக்க முடியாது. இங்கு வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி மிக குறைவு. எங்களுக்கு ஆதரவளித்து வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை பரிசாக கொடுப்போம்" எனவும் கூறியுள்ளார்.


Advertisement