விளையாட்டு Ipl 2019

முதல்முறை முதலிடத்தை பறிகொடுத்த சென்னைஅணி! இன்று நடக்கவிருக்கும் அனல்பறக்கும் ஆட்டத்தால் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளுமா?

Summary:

csk vs SRH


ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக ஆடியது.
 
அந்த அணியின் ரிசப் பண்ட் அரைசதமடித்தார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்து டெல்லி அணியை கடைசி ஓவரில் வெற்றிபெற செய்தார்.இந்த தொடரில்11 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி அணிக்கு கிடைத்த ஏழாவது வெற்றியாகும். இதன் மூலம் ஏற்கனவே 10 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வென்று முதல் இடத்தில் இருந்த சென்னை அணியை ரன் ரேட் அடிப்படையில் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது டெல்லி அணி. 

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ளும். இதுவரை முதல் இடத்தில இருந்து நேற்றைய ஆட்டத்தின் மூலம் இரண்டாமிடத்திற்கு சென்றதால் சென்னை ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
 


Advertisement