சென்னைக்கு வந்து சென்னை அணியை வச்சு செய்த மும்பை அணி! தோல்விக்கு காரணம் இதுமட்டுமே!

சென்னைக்கு வந்து சென்னை அணியை வச்சு செய்த மும்பை அணி! தோல்விக்கு காரணம் இதுமட்டுமே!


csk-vs-mumbai-indian-ipl


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான 44 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது.

புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு நேற்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேனை அணியின் கேப்டன் தோணி உடல்நல குறைவால் நேற்று ஓய்வில் இருப்பதால் ரைனா நேற்று கேப்டனாக நியமிருகப்பட்டுள்ளார்.

csk

அதேபோல ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் நேற்றைய ஆட்டத்தில் இருந்து விளக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னை அணியின் அதிரடி வீரர் முரளி விஜய்க்கு நேற்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டிகளில் கூட களமிறக்கப்படாத முரளி விஜய் நேற்று முதல் முறையாக களமிறங்கினார்.

இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய மும்பை அணியின் ரோகித் சர்மா 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் பறக்கவிட்டு 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 

csk

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆட்டத்தின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. சென்னை அணியில் புதிதாக களமிறங்கிய முரளி விஜய் அதிகபட்சமாக  35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி 17.4 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் தோனி இல்லாததால் மைதானத்தில் ரசிகர்களின் உற்சாகம் குறைவாகவே இருந்தது. சென்னை அணியில் தோனி இல்லாததன் காரணமே சேனை அணி தோல்வியடைந்ததற்கு காரணம் என சென்னை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.