கொல்கத்தா அணியை 108-ல் அனுப்பிய சென்னை அணி! மைதானத்தில் நடந்த மரண அடி!

கொல்கத்தா அணியை 108-ல் அனுப்பிய சென்னை அணி! மைதானத்தில் நடந்த மரண அடி!


csk-vs-kkr

ஐபில் போட்டியின் 23 வது ஆட்டம் நேற்று சென்னையில்நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லின் மற்றும் ராணா இருவரும் ஓட்டம் ஏதும் இல்லாமல் ஆட்டமிழந்தனர்.

csk

அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியின் அணைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸலின் காட்டு அடி சென்னையிடம் எடுபடவில்லை. இதற்கு முன்னர் பெங்களூர் அணியிடம் 13 பந்துகளில் 13 பந்துகளில் 48 ஓட்டங்கள் பெற்ற ரஸ்ஸல் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.

ஒருவழியாக ஆட்டத்தின் இறுதிவரை நின்ற ரஸ்ஸல் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். சூறாவளியாக சுழன்று அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸலை சுருட்டி வைத்தது சென்னை அணி. சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அணைத்து வீரர்களும் தடுமாறினர். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது.

csk

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் ஆரம்பத்தில் சொதப்பியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன்17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதனையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 14 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார்.

சென்னை அணியின் ப்ளசிஸ் 45 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார். இறுதியில் சென்னை அணி 17.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து அபாரமாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.