இதுமட்டும் நடக்காவிட்டால் சென்னை அணி கோப்பை வெல்வது மிகவும் கடினம்!CSK should focus more on last over

ஐபில் போட்டியின் 12 வது சீசன் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அணைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணியும் இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் தொடர்நச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 19 ஓவர்கள் வரை 141 ரன் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ 20 வது ஓவரை வீசினர். சற்றும் எதிர் பாராத விதமாக பிராவோ வீசிய அணைத்து பந்துகளையும் மும்பை அணியின் பாண்டியா அடித்து பறக்கவிட்டார்.

csk

இதன்மூலம் கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணி 29 ஓட்டங்கள் பெற்று சென்னைக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது. கடைசியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதேபோல இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியுடன் நடைபெற்றபோட்டியில் 17 வது ஓவரை வீசிய பிராவோ 19 ஓட்டங்களை கொடுத்து சென்னை அணியின் வெற்றியை கேள்வி குறி ஆக்கினார்.

17 வது ஓவரில் 19 ஓட்டங்கள் கொடுத்த பிராவோ ஒரு வழியாக கடைசி ஓவரை சிறப்பாக வீசி சென்னை அணியை வெற்றிபெற செய்தார். பொதுவாக அணிகளின் வெற்றியை நிர்ணயிப்பதே ஆட்டத்தின் கடைசி ஓவர்தான். சென்னை அணி தனது கடைசி ஓவருக்கு ப்ராவோவைதான் நம்பியுள்ளது.

csk

கடந்த இரண்டு போட்டிகளில் செய்ததுபோல் இனி வரும் ஆட்டங்களிலும் நடந்தால் சென்னை அணியின் கோப்பை கனவு நிறைவேறுவது சற்று கடினம்தான்.