தமிழகத்தில் ஃபோனி புயலை மறக்கவைத்த தோனி! சேப்பாக்கத்தில் ஏற்பட்ட தோனி புயல்!

தமிழகத்தில் ஃபோனி புயலை மறக்கவைத்த தோனி! சேப்பாக்கத்தில் ஏற்பட்ட தோனி புயல்!


csk marana mass


ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி முதல் இடத்திலும் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணி மோதும் இரண்டாவது ஆட்டம் இன்று சென்னையின் சொந்த மண்ணில் நடைபெறுகிறது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளஸி சொதப்பலாக ஆட ஆரம்பித்தனர். மூன்று ஓவர்கள்  முடிவில் சென்னை அணி மூன்று ரன் மட்டுமே எடுத்து.

அந்த அணியின் டூ பிளசிஸ் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தோனி அதிரடியாக ஆடி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் கடைசிவரை அட்டமிழக்காமல் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் தான் சென்னை அணியின் ரன் உயர்ந்தது.

csk

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 

அந்த அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தநிலையில் ஆட்டத்தின் 17 வது ஓவரிலேயே, 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெல்லி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  சென்னை அணியின் இந்த வெற்றியினால் புள்ளிபட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் ஃபோனி புயலை மறக்கவைத்து தோனி புயல் சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.