நேற்றைய ஆட்டத்தின் அபார வெற்றியால் புள்ளிபட்டியலில் முன்னேறிய சிஎஸ்கே.! புள்ளிபட்டியல் முழு விவரம்..!

நேற்றைய ஆட்டத்தின் அபார வெற்றியால் புள்ளிபட்டியலில் முன்னேறிய சிஎஸ்கே.! புள்ளிபட்டியல் முழு விவரம்..!



csk improved in rank list

ஐபில் 13 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில் இதுவரை 18 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 
  
நேற்று நடந்த 18 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைதந்த  சென்னை அணி நேற்றய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 18 போட்டிகளில் மும்பை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ipl rank

அதேபோல் 4 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றி, 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி இரடாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதேபோல் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்று கொல்கத்தா அணி நான்காவுது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சென்னை அணி நேற்றய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.

அதேபோல் விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் , விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.