சென்னை அணிக்கு எதிராக இயக்குனர் அட்லீயா? ரசிகர்கள் கொடுத்த விளக்கம்!



csk-fans-talk-about-yesterday-match


ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற சென்னைக்கும் கொல்கத்தாவிற்கும் நடைபெற்ற போட்டியில் இயக்குனர் அட்லீயும் நடிகர் ஷாருக்கானும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சென்னை அணி எந்த மாநிலத்தில் ஆடினாலும், பிற அணியின் ரசிகர்கள் தன்னை மறந்து சென்னை அணிக்கு ஆதரவு தருவது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் தல தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா தான்.

csk

ஆனால் நேற்று நடைபெற்ற சென்னைக்கும், கொல்கத்தாவிற்கும் இடையேயான போட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ கொல்கத்தா அணிக்கு ஆதரவாக இருந்தது சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும், அட்லீ ஷாருக்கான் அருகில் அமர்ந்ததற்கு காரணம் கூறுவது ஏற்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், அட்லீக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அட்லீயின் ரசிகர்கள் கூறுகையில், மூன்றே படம் இயக்கிய ஒரு இயக்குனர், இந்தியாவின் மிகப்பெரிய நடிகரின் உடன் அமர்ந்து மேட்ச் பார்ப்பது எல்லாம் அவர் உழைப்பின் வளர்ச்சி தான் காரணம் என கூறி அட்லீயை பெருமை படுத்தியுள்ளனர்.