விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தால் சோகத்தில் மூழ்கிய சிஎஸ்கே ரசிகர்கள்.! என்ன காரணம்.?

Summary:

முக்கியமான வீரர்களை வைத்திருந்தும் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றாதது பெரும் ஏமாற்றமாய் இந்தவருடமும் அமைந்தது என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று நடந்த  நாக் அவுட் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும் என்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் படிக்கல் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டும் எடுத்தது. இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 

சன்ரைசர்ஸ் அணி அணி 67 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக களமிறங்கிய வில்லியம்சன் 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சன்ரைசர்ஸ் அணியின் ஹோல்டர் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தநிலையில் கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து வின்னிங் சாட்டை அடித்தார். இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் அணி. இந்த ஆட்டத்தின் தோல்வியால் 2020 ஐ.பி.எல் போட்டியில் இருந்து வெளியேறியாது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஆனால் இந்த சீசனில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது சென்னை அணி. இதனையடுத்து சென்னை ரசிகர்களும் பெங்களூரு அணி எப்படியாவது இந்த வருடம் கப் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அதற்க்கு முக்கிய காரணம் இந்திய அணியின் கேப்டன் விராட் மற்றும் ஏபிடி தான்.

பேட்டிங் இமயத்தின் உச்சியில் இருக்கும்  விராட் மற்றும் ஏபிடி அந்த அணிக்கு இந்த வருடம் எப்படியாவது கோப்பையை பெற்றுத் தருவார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நேற்றய ஆட்டம் சென்னை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முக்கியமான வீரர்களை வைத்திருந்தும் அந்த அணி கோப்பையை கைப்பற்றாதது பெரும் ஏமாற்றமாய் இந்தவருடமும் அமைந்தது என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement