CSK வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் மாஸ் தான்! அப்படி என்ன செய்துள்ளார்கள் பாருங்க

CSK வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் மாஸ் தான்! அப்படி என்ன செய்துள்ளார்கள் பாருங்க


Csk fans cleaned chepak stadium after match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் வேலையில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் கடந்த சனிக்கிழமை மோதின. 18 வது போட்டியான இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின்னர் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2019

161 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.

IPL 2019

சென்னையில் ஆட்டம் நடைபெற்றதால் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம் சூழ்ந்து மிகப்பெரிய அளப்பறையை காட்டிவிட்டனர் CSK ரசிகர்கள். இதில் பாராட்டத்தக்க விசயம் என்னவெனில் அன்றைய ஆட்டம் முடிந்ததும் #whistlepoduarmy ரசிகர்கள் செய்த மிகப்பெரிய செயல் தான். 

அன்றைய ஆட்டம் முடிந்தவுடன் CSK ரசிகர்கள் மைதானத்தில் ஆங்காங்கே கிடந்த குப்பைகளை தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்ய துவங்கிவிட்டனர். அவர்கள் மொத்தமாக 10 கிலோவிற்கும் மேலான குப்பைகளை பொறுக்கியுள்ளனர். 

IPL 2019

கிளீன் இந்தியா என்று வாயாமல் மட்டும் வடை சுடாமல், அதை செய்து காட்டிய CSK ரசிகர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. CSK அணியின் சுரேஷ் ரெய்னா அவர்களை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.