சிஎஸ்கேவில் தோனியின் எதிர்காலம் என்ன.. சிஈஓ காசி விஸ்வநாதன் அதிரடி அறிவிப்பு!

சிஎஸ்கேவில் தோனியின் எதிர்காலம் என்ன.. சிஈஓ காசி விஸ்வநாதன் அதிரடி அறிவிப்பு!


Csk ceo kasi reveals about dhoni's future

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த செய்தி ரசிகர்கள் மற்றும் பல வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணிக்காக தோனி விளையாடும் கடைசி ஆட்டத்தினை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றும் விதமாக தோனியின் ஓய்வு குறித்த அறிவிப்பு அமைந்துவிட்டது. ஆனால் ரசிகர்களுக்கு தற்போது பெரும் ஆறுதலாக இருப்பது ஐபிஎல் 2020 தான்.

Dhoni Retires

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இந்த ஆண்டு விளையாடுவது உறுதியாகிவிட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள சிஎஸ்கே அணியின் சிஈஓ காசி விஸ்வநாதன் தோனி தான் நினைக்கும் வரையில் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடலாம். 2021 ஐபிஎல் தொடருக்கு பிறகும் தோனியை சிஎஸ்கே அணியில் இடம்பெற வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.