கிரிக்கெட் வீரர் கங்குலியின் அழகான மனைவி மற்றும் மகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம் இதோ.
இந்திய கிரிக்கெட் அணியில் தாதா என அழைக்கப்படுபவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவ்ரவ் கங்குலி. இந்திய அணியின் மிக சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் கங்குலியும் ஒருவர். இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் கங்குலி. ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றுள்ள வீரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி தற்போது Bengal கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், IPL போட்டியின் 4 பேர் கொண்ட முக்கிய குழுவில் ஒருவராகவும் உள்ளார் சவுரவ் கங்குலி. அதுமட்டும் இல்லாமல் பல்வேறு போட்டிகளில் போட்டி வர்ணனையாளராகவும் உள்ளார்.
இவரது திருமணம் வாழ்க்கையை பார்த்தோமேயானால், தனது சிறுவயது தோழி டோனா ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கங்குலி. இவர்களுக்கு சனா கங்குலி என்ற 18 வயது மகள் ஒருவர் உள்ளார். இதுவரை பெரிதாக வெளிவராத அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.