விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய கிரிக்கெட் வீரர்..!! வைரலாகும் வீடியோ..!cricket-player-venkatesh-iyyar-dance-for-vijay-song-lat

டிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவரது படம் திரைக்கு வந்தாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

தற்போது இவர் நடித்து வெளியாக இருக்கும் படம் 'லியோ'. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒருவரான மற்றும் வளர்ந்து வரும் வீரர்களில் முக்கிய நபராக இருப்பவர் தான் வெங்கடேஷ் ஐயர். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவர், கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார்.

இவர் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸ்காக காத்திருக்கும் லியோ படத்தின் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.