பாஜகவில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி; வெளியான பரபரப்பு தகவல்.!cricket-player-jadeja-wife-join-bjp-party

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரவீந்திர ஜடேஜா. தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.  இந்நிலையில் உலகக் கோப்பை போட்டி தொடரில் ஆடும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

pjp

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா குஜராத் மாநிலத்தின் ஜாம் நகா் பகுதியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் எம்.பி. பூணம் மாடம் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டாா். 

இதற்கு முன்பு, ரவீந்திர ஜடேஜாவும், ரிவாபாவும் கடந்த மாதம் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனா்.

pjp

குஜராத்தின் ஜாம் நகா் பகுதியில் ரிவாபா சற்று செல்வாக்கு மிகுந்த நபராகவும், அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிந்த முகமாகவும் இருப்பதால் அப்பகுதியில் பாஜகவுக்கு கூடுதல் பலம் சோ்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.