விளையாட்டு

கேப்டன் தோனியை டென்ஷனாக்கிய 19 வது ஓவர்; கோபத்தின் உச்சியில் தல தோணி!

Summary:

Cool captain dhoni get angry on 19th over csk vs kxip

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் வேலையில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதின. 18 வது போட்டியான இந்த ஆட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

https://cdn.tamilspark.com/media/18100xbl-rahulsarfarazcskvkxip.jpeg

இதனால் இன்றைய ஆட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின்னர் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

161 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பஞ்சாப் அணி சற்று சறுக்கலை சந்தித்தது.

https://cdn.tamilspark.com/media/18100xbl-MS-Dhoni-IPL-CSK.jpg

இந்நிலையில் 19 வது ஓவரை வீசிய சென்னை அணியின் வீரர் சாகர் 19 வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளை தொடர்ந்து நோ பாலாக வீசினார். இதனால் Mr . கூல் என அழைக்கப்படும் சென்னை அணியின் கேப்டன் தோனி பயங்கர கோபமானதை பார்க்க முடிந்தது.

ஒருவழியாக மீதமுள்ள பந்துகளை சிறப்பாக வீசிய சாகர் சென்னை அணியினை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றார்.


Advertisement