இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்கள் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள்.. கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்கள் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள்.. கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!


Colourful photos of indian players in Southampton

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இங்கிலாந்திற்கு பயணம் செய்துள்ளனர். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் சௌதாம்ப்டன் ரோஸ் பௌல் மைதானத்திற்கு இன்று இந்திய வீரர்கள் சென்றடைந்தனர். இந்தியாவை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து வந்தடைந்து இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

WTC21இந்நிலையில் இன்று சௌதாம்ப்டன் மைதானத்தின் அழகை வெளிப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்களான, ரோகித் சர்மா, சாஹா, பும்ரா  ஆகியோர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில் வீரர்களின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.